புறப்பட்டு தளபதியே கோட்டை நோக்கி !

பொழுது புலர்ந்த்து, நாளும்
நல்ல படியாய் விடிந்தது
பொல்லாத ஆட்சி வீழ்ந்தது
உதய சூரியன் உதித்தது
மக்களின் மனதில் மகிழ்ச்சி மிகுந்தது
காவிகளிடமிருந்தும் அடிமை பாவிகளிடமிருந்தும்
தமிழகம் தப்பியது சில்லரை கட்சிகள்
சிதறிபோனார்கள், உவேசியும் பரதேசியார்.
உதய சூரியனே உனக்காக காத்திருக்கின்றது

முதல்வர் பதவி, 
நீட்டை விரட்டனும், காவேரியை யுடன் டெல்டாவை
மீட்கனும், CAA,NPR ஐ ஒழிக்கனும், 
ஸ்டாலினா ஸ்டெர்லைட்டா ஒரு கை பார்க்கனும்
தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிக்கனும்
இது உனக்கு தேன் நிலவு அல்ல, பஞ்சு மெத்தையில்
மல்லிகை வாசத்தில் தூங்குவதற்க்கு
கடமைகள் ஆயிரமிருக்கு,
கடவுள் துனைபுரிவார் உனக்கு !
புறப்பட்டு தளபதியே 
கோட்டை நோக்கி !

என்னுள் எழுந்தவைகள்