அல்லாஹ் உன் வீடு வந்துவிட்டேன்,
உன்னை தொழுக வந்து விட்டேன்
அழுது கேட்பது என் கடமை
அதை தருவது உன் உரிமை
உன்னிடம் ஏந்திய கரங்களை
வெற்று கரங்களாக திருப்பிட
வெட்கப்படுவன் நீ,
உன்னை நோக்கி ஒரடி வைத்தால்
பத்தடி நோக்கி ஓடி வருபவன் நீ
உன்னிடம் ஏந்திய எங்களுடைய
கரங்களுக்கு அள்ளி தருவாய்...
கேட்பவர்களுக்கு தந்து மகிழ்பவன் நீ
கேட்டுவிட்டேன் தந்துவிடு.
உன்னையன்றி எங்களை இரட்சிப்பவர்
யாருமில்லை...எங்களை இரட்சித்திவிடு
வெள்ளி பனி போல் மனம் உருகி கேட்டுக்கும்
எங்களுக்கு இந்த வெள்ளி கிழமையின்
பரக்கத்தினால் அள்ளி கொடுத்து விடு...