எங்கே சென்றாய் என் நண்பனே !

 

நண்பனே, 
காலை கண்விழித்து வாட்ஸ் ஆப் பார்த்தேன். 
எப்போதும் உன் ஸலாமும், நல் வாழ்த்துகளுடன் 
துவங்கும் அந்த குழுமம்....இன்று வெற்றிடமாய் 
காட்சியளிக்கின்றது.

ஜாலி ஜமாலிய குடும்பமாய்,  
கலகலப்பாய் இருந்த 
குழு- இன்ரு  கலை இழந்து விட்டது.

நான் வந்துவிட்டேன் 
யாரு இருக்கீங்க வாங்கடா ? 
என கூவி கூவி அழைப்பாய்... 
இப்போது நாங்கள் அழைக்கின்றோம்.....
நீ எங்கே இருக்கின்றாய் வாடா, நண்பனே...

எங்கள் உறவே வேண்டாமென்று 
மண்ணறையில் புகுந்துவிட்டாயா? 
மண்ணறையில் நீ புது மணமகனைப்போல் உறங்கு 
மலர் வீசும் மஞ்சனையில் மல்லிகையின் வாசனையில்

புது மணமகனை போல் நீ உறங்கு. 
எங்களுடன் நீ  இல்லாவிட்டாலும்  என்ன? 
உனக்காக உன் நினைவுகளுடன் என்றும் 
நாங்கள் இருப்போம்...உன் மறுமைக்கான 
துஆக்களுடன் உன் நினைவில் இருப்போம்.

என்னுள் எழுந்தவைகள்