முஹர்ரமே வருக!!!

இஸ்லாத்தில் முதல் மாதமாம்
முஹர்ரமே வருக!!!
உன் முழுமையான அருளை தருக!!@
எங்களுக்கு செழுமையான வாழ்வை தருக

அன்னை பூமியை துறக்க செய்து
வள்ளல் நபியின் வாழ்க்கை சிறக்க  
‘ஹிஜ்ரத்’ எனும் 
வரலாறு தந்த 
எங்கள் புனித மாதமே வருக!

நய வஞ்சர்களின் செயல்
கர்பலாவின் நினைவுகள் 
இன்னும் நெஞ்சை விட்டு மாறவில்லை

இறைவனின் திருமறையை தினமும் ஓதி-
பொருளுனர்ந்து வாழ்வில் செயல் பட
அண்ணலாரின் அரிச்சுவடியை பின்பற்றி எந்நாளும் வாழ
அருள் புரிவாய் அல்லாஹுவே!

உனது மக்கத்து நபியின்  பக்கத்தில் வந்து சலாம் உரைக்க
அருள் தருவாய் ரஹ்மானே.

மனிதம் மண்ணில் மலர்ந்திட
மானுடம் உலகில் வளர்ந்திட
உண்மையும் நன்மையும் விளைந்து
பொய்யும் பொறாமையும் புதைந்து

அன்பையும் பண்பையும் 
உறவையும் நட்பையும்  போற்றி
எந்நாளும் உன்னையே புகழ்ந்து
இவ்வுலகம் உள்ள வரையில்
உன்னையே தொழுது-உன்னிடமே
கையேந்தி எங்களை எந்நாளும்
நலமாய் வாழ செய்வாய் 
வல்ல ரஹ்மானே

ஹிஜ்ரத் செய்த நபியின் பாக்கியாத்தால் எங்களின்
ஹாஜாத்துக்களை கபூல் செய்வாய் ரஹ்மானே

இஸ்லாத்தின் முதல் மாதத்தில் முதல் நாளில் கேட்கும்
இந்த துஆவை ஏற்றுக் கொள்வாய்  ரஹ்மானே.

புத்தாண்டு என்பது..
அனாச்சாரம் அல்ல புதுமையும் அல்ல
இது ஒர் நினைவூட்டு.

என்னுள் எழுந்தவைகள்