ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்

கல்வியை கற்பித்த
ஆசிரியர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றேன்

அறிவுத் தூண்டுகோல்களுக்கு.... 
அகரம் சொல்லித் தந்த சிகரங்கள்

கல்லாமையை இல்லாமையாக்கி 
அறிய பிள்ளைக்கும் அறிவு புகட்டும் 
அறிவின் துளிகளை அள்ளி தந்து 
புதுமை செய்கிற அற்புத வித்தகர்கள் நீங்கள்

இருட்டுக்கே வெள்ளையடிக்கிற 
உங்கள் நல்ல மனசு தான் 
கடைசிபெஞ்சு மாணவனின் 
உள்ளத்தையும் கொள்ளையடிக்கும் 

இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்

என்னுள் எழுந்தவைகள்