நண்பனுக்கு பாராட்டு !

 கலை வளர்ந்தால்
கலாச்சாரம் செழிக்கும்,
கலாச்சாரம் செழித்தால்
தமிழ் வளரும்,
தமிழ் வளர்ந்தால்
தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கும்.

நம் முன்னோர்கள்
நமக்காக விட்டுச் சென்ற
இந்த அரிய கலைப் பாரம்பரியம்,
இன்று நம் கலைமாமணியின்
அர்ப்பணிப்பால்
புதிய ஒளியாய் மலர்ந்து கொண்டிருக்கிறது.

கலைமாமணியின்
அன்பான வழிகாட்டுதலிலும்,
அயராத உழைப்பிலும்,
ஒழுக்கமிக்க பயிற்சியிலும்
இக்கலை பயிலும் ஒவ்வொரும்
நம் தமிழ் பண்பாட்டின்
பெருமையையும் பாரம்பரியத்தையும்
அகில உலகம் முழுவதும்
பறைசாற்றும் தூதுவர்களாக விளங்கட்டும்.

கலை என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல,
அது ஒரு இனத்தின் அடையாளம்,
ஒரு மொழியின் உயிரோட்டம்,
ஒரு பண்பாட்டின் பெருமை.

ஜமாலிய கலை தோட்டத்தில் மலர்ந்த
கலைமாமணி இளங்கோவன் நமது நண்பன்
என்று சொல்லி பெருமைகொள்வோம்.
அவன் உயர்விற்க்கு நாம் என்றும்
வாழ்த்து கூறுவோம். 
இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.

என்னுள் எழுந்தவைகள்