நண்பனே ஜாகீர் உசேன்!

நண்பனே ஜாகீர் உசேன்,
உன்னை  நினைத்து பார்க்கின்றேன்
நினைக்காத நாள் இல்லை
உன்னை நினைத்து பார்க்கின்றேன்.
ஒரு வருடம் ஓடி விட்டது
வருடம் எத்தனை ஓடினால் என்ன?
உன் நினைவு என் மனதை விட்டு நீங்கிவிடாது
மூன்று வருட கல்லூரி நட்பை
முப்பது வருடங்களுக்கு பின்
உலகமெல்லாம் தேடி
வாட்ஸ் ஆப் யில் புகுத்தினாய்
அந்த நட்பு மூன்று வருடமே நினைத்தது
கண் முன்னே நீ வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் உன் முகம்
என் முன்னே  எந்நாளும் உயிர் வாழும்
எங்களை விட்டு செல்வாய் என்று முன் அறிந்து
எங்களை வாட்ஸ் ஆப்-ல் ஒன்றினைத்தாய்
எங்களுக்காக நீ வகுத்த பாதை இது
உன் நினைவிலே
என்றும் பயணிப்போம்..
 

என்னுள் எழுந்தவைகள்