பெருநாள் கவிதை.

இறைவன்  நமக்கு அளித்த நன்கொடையாம்
புனித ரமலானில்  முப்பது நாளும் முழுமனதாய் நோன்பிருந்து, 
அருள்மறையாம்  திருமறையை  மனநிறைவாய் தினம் ஓதி,
ஏழைவரியாம்  ஜக்காதையும் வாரி வழங்கி
ஐவேளை தொழுகையுடன் தராவீஹ்கையும் தொழுது
விடிகாலை விழித்து தகஜத்தையும் தவமுடன் தொழுது
ஆயிரம் மாதங்களுக்கு சம்மான லைலத்துல் கதரையும் பெற்று
ஈதுல் பித்ருவையும்  ஈகையுடன் வழங்கி
ஷவ்வால் இளம்பிறையை வானில் கண்டு
மனநிறைவாய் நோன்பை நிறைவு செய்தோம்.
அல்ஹம்துலில்லாஹ்….

பிறை கண்டோம் வானிலே!
பிறை கண்டோம் வாணிலே!
மகிழ்ச்சி பொங்குது மனதிலே!
மகிழ்ச்சி பொங்குது மனதிலே
பெருநாள் வந்திருச்சு ! ஆகா பெருநாள் வந்திருச்சு!!
இறைவனின் அருளாலே, புத்தாடை பூண்டு
புன்னகை பூத்து, இல்லம் தோறும், அன்பு பெருகி
பெருநாளை தந்த இறைவனுக்கு நன்றி கூறிட
பள்ளி நோக்கி செல்வோம்  இறைவனை தொழுதிடவே
செல்லு வழியெல்லாம்  நாம் சொல்லிகொண்டே  போவோம்
தக்பீர் எனும் முழகத்தை
அல்லாஹு அக்பர்!   அல்லாஹுஅக்பர்!  அல்லாஹு அக்பர்!

நோன்பிருந்த நாம் இறைவனிடம் கூலி கேட்போம்
அதற்க்கு, இறைவன் நானே கூலி என்பான்
நீ படைத்த அடிமைக்கு நீயே கூலியா ?
அல்லாஹு அக்பர!  அல்லாஹுஅக்பர்!  அல்லாஹு அக்பர்!
எந்நாளும் எங்களுக்கு வஞ்சமில்லா நெஞ்சையும்  
உற்றார் உறவுகளோடு பகை மறந்த நட்பையும்
இல்லாதார்க்கு இல்லை என்று சொல்லாத
ஈகை குணத்தையும்,  மனித நேயத்தையும்
மன்னிக்கும் மாண்பையும் 
தந்து அருள்வாயாக!! என் இறைவா !!!  
இப்புவியில் நாங்கள் வாழ, நீ விதித்த நாள் வரையில்
நயவஞ்சகர்கள் பிடியிலிருந்தும் வஞ்சக சூழ்ச்சியிலிருந்தும்
சூழ்ச்சிகளுக்கெல்லாம்  சூழ்ச்சியான நீயே
எங்களை காப்பாற்று வாயாக
ஃபிர்அவனை வெள்ளப் பெருக்கில் முழ்கியது போல்
எங்களின் எதிர்களை முழ்க செய்வாயாக என் இறைவாய்
ஆண்டாண்டு காலாமய் இன்னல் படும் பாலஸ்தீன
மக்களுக்கு நிரந்த வெற்றியை தந்தருள்வாய் என் இறைவா

இம்மையில் அறமோடு வாழ,
மறுமையில் உன் அரணோடு
வாழ, எமக்குதவிடும் ரமலானை,
மீண்டும் சந்திக்க விழைகின்றோம்.
வாய்ப்பை தந்திடு யா அல்லாஹ்..
பசியாறி,களிப்புற்ற வேளையில்,
சென்றுவிட்ட ரமலானை எண்ணி,
நெஞ்சம் கலங்குதே யாஅல்லாஹ்..
தரணியெங்கும் மானுடம்
செழிக்கவும், நல்லிணக்கம்
சிறக்கவும்,ஈகை நாளில்,
உன்னிடம் வேண்டுகிறோம்.
அருள்புரிவாய் யா அல்லாஹ்..!
மண்ணறைக்கு செல்லும் வரை உன்
நினைவோடு,மாநபி வழி நடந்து,மனித
மாண்பினை பேணிடும் நல்ல முஃமீனாய்
எங்களை ஆக்கி  அருள்வாயாக!!
 
உறவுகளோடும்,சீரிய நட்புக்களோடும் இந்த
ஈகை திருநாளை இனிதாய்,இனிமையாய்
குதூகலித்து கொண்டாடும் பாக்கியத்தை,வல்ல
ரஹ்மானே, எங்களுக்கு தந்தருள்புரிவாயாக!!
எங்களின் கூலியை  உன்னிடம் கேட்டு கையேந்தி கேட்டுவிட்டோம்
இறைவா !  எந்திய இந்த கரங்களை வெறும் கரங்களாக ஆக்கி விடாமல்
உன்னிடமிருந்து பெற்று விட்ட வெற்றி கரங்களாகி
எங்களுக்கு நல் அருளையும் நேர்வழியை காண்ப்பியாக என் இறைவா !

2025 ஈத் பெருநாள் கவிதை
மின்னல் எஃ. எம் க்காக எழுதப்பட்டது 


என்னுள் எழுந்தவைகள்