சொல்லால் புகழ்ந்திடுவோம்
சொல்மணக்க வாழ்த்திடுவோம்
ஜமால்முஹம்மது கல்லூரி
சாதனையை சரித்திரத்தை
கல்லூரிச் சாலையிது
கவின்மிகு சோலையிது
வல்லாரை நல்லாரை
வார்த்தெடுக்கும் கழகமிது
பண்தொடுத்துப் பாடிடுவோம்
பணிசிறக்க துஆசெய்வோம்!
கலை,பண் பாட்டுடனே
கல்வியை மேம்படுத்தும்
தழைத்திடும் வாழ்வினுக்கே
தீன்நெறிப் பாடம்சொல்லும்
ஆசிரியப் பெருந்தகைகள்
ஆற்றுகிறார் நிதம்தொண்டு
வீசிவரும் தென்றலென
நெஞ்சினிக்கும் அருந்தொண்டு
அறிவுக் கண்திறக்கும்
அருமைமிகு கல்லூரி
செறிவாய் மாணவரை
சீர்படுத்தும் கல்லூரி