காந்தி ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்.

காந்தி ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்.
பிணமான போதிலும் பணமாக உயிர் வாழும்
காந்தியே

பாடுபட்டு வாங்கிய சுகந்திரத்தை
ஆண்டு பார்க்காமல் மாண்டு போன காந்தியே

சுகந்திர பறவையாய் எங்களை பறக்க விட்டாய்
சுட்டு குருவிபோல் உன்னை சுட்டுவிட்டார்கள் 

அன்று - அன்னியர்களிடம் நாட்டை காப்பாற்றினாய்
இன்று - கொள்ளையர்களிடம் நாடு  விற்க படுகின்றது

இனி நாட்டில் விற்பதற்க்கு எதுவுமில்லை
நீதி தேவைகளின் தராசுகளும் விற்பனை வந்துவிட்டன
நீதிகள் கூட நிதியால் தான் நிர்னயிக்கப்படுகிறது 
பிறப்பால்  சாதி பார்கின்றான்
பிறப்பறுப்பில் சாதி பார்பத்தில்லை
உன் சத்திய சோதனையில் சதிகார்கள் ஆட்சி

காந்தியே,
உன்னை  மகாத்மா என்று கூறியவன் தேச துரோகி ஆனான் 
உன்னை  கொன்றவன் தேச பக்தன் ஆனான்.
ரூபாய் நோட்டில் நீ ஏன்  சிரிக்கின்றாய்  
உன்னை போட்டவனும் உன் அருகில் வந்துவிட்டான் 
வந்து விட்டான் என்றா ?

காந்தி ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்.

என்னுள் எழுந்தவைகள்