சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்.
74 வது சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்
மக்கள் நிம்மதியை இழந்து,
கொரானாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்.
ஆட்சி என்ற பெயரில், மக்களின் சுகந்திரம்
ஒடுக்கப்பட்டு, வாழ்கை நசுக்கப்படுகின்றார்கள்
சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்.
நாங்கள் சிந்திய ரத்தம் இன்னும் காயவில்லை
எங்களை அன்னியன் என்று விரட்டப்பார்கின்றார்கள்
சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்.
என் நாட்டின் வளங்களை அணில் போல்
அம்பானிகள் தின்று விட்டார்கள்
விவசாயிகள் வீதி க்கு வந்துவிட்டார்கள்
நீதிகள் எல்லாம் விலைக்கு போய்விட்டது
மோசடி செய்பவன் தலைவன் என்று போற்றப்படுகின்றான்.
உண்மை புதைப்பட்டு பொய் விளைக்கபட்டு
வரலாறு என்று புனைக்கப்பட்டுகின்றது.
வாழ்க்….பாரதம்….பாவம் பாரத மக்கள்
பாவட்ட இந்திய மக்களுக்கு இனிய
சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்.