பாலர் பள்ளி மன்ப-உல்-உலா பள்ளி



அகரம் கற்றிட ஆரம்ப பள்ளி சென்றேன்...
முன் பின் அறியா  மழலை முகங்கள் 
கள்ளம் கபடம் அறியா பிஞ்சு உள்ளங்கள் 
இவர்கள் தான் நம்  எதிர் கால நண்பர்கள் 
என்பதை  அறியா பாலர்பள்ளியில் 
நட்புகள் ஆரம்பம் 
அகரம் கற்றமே இல்லையே 
அரட்டையை கற்று கற்றுகொண்டோம்.!

எழுத கூட தெரியாத காலத்தில்
எழுந்து நின்று பேச கற்றுகொண்டோம் 
எதிர் வார்த்தை இல்லை.. 
ஏன் என்ற கேள்வி இல்லை 
அன்று ஆசிரியர் சொன்னதே வேத வாக்கு 
அரட்டைக்கு அடி வாங்குவதும் 

துடைத்து கொண்டு 
போவதும்  வாடிக்கை 
இது சக மாணவர்களுக்கு 
வேடிக்கை. 
இந்த பள்ளியை பருவதை நினைக்கும் 
நினைவுகள் நிழலாடும்...
பால்ய நண்பர்களின் முகங்களும்
வந்து போகும்..வந்து போனாலும் 
நிரந்தரந்தாய் மனதில் நிலைத்திருக்கும்.




என்னுள் எழுந்தவைகள்