அடிமை வாழ்வில் மீட்சி பெற்று
குடியாட்சி பெற்ற நாள்
தேச தந்தை
வானில் கையுயர்த்தி
மெர்டேக்கா..மெர்டேக்கா
என்று முழங்கிய நாள்
மலேசியா சுதந்திரத்தை
நேசித்து, சுவாதிக்கொண்டிருக்கும்
மூவின மக்கள் அனைவரும் ஒன்று கூடி
மெர்டேக்கா ! மெர்டேக்கா என்று
முழங்கும் நாள்.
ஒன்றினந்த மக்கள் நாமென
ஒரே மொழியில்
மெர்டேகா மெர்டேகா மெர்டேகா
என்னும் சொல் மந்திர
மலேசியா முழுவது ஒலிக்கும் நாள்.
எங்கு பார்க்கினும்
நாம் மலேசியா கொடி
பட்டொழி விசி
வான் நோக்கி பறக்கின்றது, அது
நான் மலேசியன் என்று சொல்லி
பறக்கின்றது
மத பேதமில்லை
நீயா நானா என்ற கோஷமில்லை
நீதியும் நேர்மையும் கொண்டு
நீண்ட சரித்திரம் படைக்கும் நம் நாடு
பண்பாடுகள் பல கொண்டு
மனித நேயம் போற்றி
நாம் மலேசியன் எனறு முழங்கி
பாரிலே சிறந்து
விழங்கும் நம் நாடு இது.
மெர்டேகா மெர்டேகா மெர்டேகா.
மலேசிய நண்பர்கள் அனைவருக்கும்
எனது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.