பட்டம் வழங்கும் நமது நண்பர் பேராசிரியர்

 




அறிவை விதைத்து ஆளுமையை வளர்க்கும்
                                      ஆசிரியர் பணியே உயர்ந்த தொண்டு.

அந்த உயர்ந்த பணியின் மகுடமாக இன்று,
பேராசிரியராக மாணவிகளின்
கனவுகளை நினைவுகளாக்கி
பட்டமளிக்கும் பெருமைமிகு மேடையில்
எங்களின் நண்பராகிய தாங்கள் 
அமர்வது  வழங்குவது 
எங்களுக்கு பெருமை !
ஜமாலின் என்று சொல்லி தலை நிமிர்வதில்
திமிர் கொண்ட பெருமை

ஒரு பட்டத்தை வழங்குவது
வெறும் சான்றிதழை அளிப்பதல்ல;
ஒரு தலைமுறையின் எதிர்காலத்தை
நம்பிக்கையுடன் வழியனுப்பது ஆகும்

அறிவின் ஒளி என்றும் தங்கள் பிரகாசிக்க,
தங்களின் கல்விப் பணி மேலும் சிறந்து வளர,
இன்னும் பல ஆயிரம் மாணவர்களை
உருவாக்கிட எல்லாம் வல்ல இறைவனிடம் 
துஆ செய்கின்றேன்.

என்னுள் எழுந்தவைகள்