அகிலங்களின்
அதிபதியே அல்லாஹுவே !
அறிய முடியா
ரகசியமே ! புதை பொருளே,
விதை வெடிக்க
வைத்து விந்தைகள் செய்பவனே,
சத்தினே வித்தகனே
சம தர்ம வித்தகனே,
இறை என்ற சொல்லின்
இலக்கணமே,
இலக்கியமே
! புகழ் அனைத்து உனக்கே.!
வாண் தந்த பால்
வெளியில் இரவெல்லாம்
மழை பொழிய செய்தவனே
மழையும் ஒர்
பொருட்டல்ல குடை பிடித்து
உன் இல்லம்
தேடி மனம் நிறைவாய்
அல்லாஹு அக்பர்!
அல்லாஹு அக்பர்!!
மனமுறுகி கண்கள்
கசித்து
உனக்கு சிரம்
தாழ வைத்தவனே,
நீயே ! மகா
பெரியவன்.
எனக்கு அளித்த
பாக்கியத்தை
என் மக்களுக்கும்
நீ தந்தருள் வேண்டுகிறேன்