RTM மின்னல் FM க்காக
ஈத் பெருநாள் கவிஞரங்கம் நிகழ்ச்சி
வாசிக்கப்பட்ட கவிதை.
11.04.2024
*******************************
ஷவ்வால் பிறை கண்டோம்
மனநிறைவால் உள்ளம் நிறை கொண்டு
ஈத் முபாரக் எனும் வாழ்த்தினை
உங்களுடன் RTM பண்பனையில் மூலம்
மனமகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
புனித மாதத்திலே மறை படித்து,
நாதர் நபி உரை படித்து,அழுது,
தொழுது,மனதை உழுது,
ஈகைப் பெருநாளை
எட்டிவிட்டோம் உன்னருளால்..
யா அல்லாஹ்..!
தரணியெங்கும் மானுடம்
செழிக்கவும்,நல்லிணக்கம்
சிறக்கவும்,ஈகை நாளில்,
உன்னிடம் வேண்டுகிறோம்.
அருள்புரிவாய் யா அல்லாஹ்..!
நோன்பு ஒர் ரகசியம்
அதை அறிந்தவனும்
நீயே..... ஆகையால் தானே
அதற்க்கு கூலியை நீயே!
எம் நாட்டில் உன் அருளால்
நேர்மையான ஆட்சியினால்
சுபிச்த்துடன் சுவாக்கின்றோம்
யா அல்லாஹ்..!
எம் தொப்புல் கொடி நாட்டிலும் உன் அருளால்
நேர்மையான ஆட்சியாளர்யாளர்களை தந்தவருளாய்
யா அல்லாஹ் !
நாதியற்று, நாடற்று கொடூர பாவிகளால்
பரிதவிக்கும் எம் பாலஸ்தீன மக்களுக்கும்
உன் அருளை புரிவாய் யா அல்லாஹ் !
உலகமெங்கும் வாழும் முஸ்லீம்களும்
உன் அருளை புரிவாய் யா அல்லாஹ்...!
எந்நாளும் எங்களுக்கு
வஞ்சமில்லா நெஞ்சையும்
உற்றார் உறவுகளோடு
பகை மறந்த நட்பையும்
இல்லாதார்க்கு இல்லை
என்று சொல்லாத
ஈகை குணத்தையும்
மனித நேயத்தையும்
மன்னிக்கும் மாண்பையும்
தந்து அருள்வாயாக!
யா அல்லாஹ்!
மண்ணறைக்கு
செல்லும் வரை உன்
நினைவோடு,மாநபி
வழி நடந்து, மனித
மாண்பினை பேணிடும்
நல்ல முஃமீனாய்
எங்களை ஆக்கி
அருள்வாயாக!!
யா அல்லாஹ்!
உறவுகளோடும்,சீரிய
நட்புக்களோடும் இந்த
ஈகை திருநாளை
இனிதாய்,இனிமையாய்
குதூகலித்து கொண்டாடும்
பாக்கியத்தை,வல்ல
ரஹ்மானே, எங்களுக்கு
தந்தருள்புரிவாயாக!!
யா அல்லாஹ்!
பெருநாள் காலை,புத்தாடை
பூண்டு,உறவுகளோடு 'நா' மகிழ
பசியாறி,களிப்புற்ற வேளையில்,
சென்றுவிட்ட ரமலானை எண்ணி,
நெஞ்சம் கலங்குதே யாஅல்லாஹ்..
இம்மையில் அறமோடு வாழ,
மறுமையில் உன் அரணோடுவாழ,
எமக்குதவிடும் ரமலானை,
மீண்டும் சந்திக்க விழைகின்றோம்.
வாய்ப்பை தந்திடு யா அல்லாஹ்..