அம்மா !
ஒன்பது மாதம்
உன் கருவறையில்
என்னைச் சுமந்து,
உதிரத்தை உணவாக்கி
துன்பத்தை இன்பமாக்கி
உயிர் போகும் வலியை பொறுத்து
உலகிற்கு என்னை வார் தொடுத்தாய்
ஆதனால் தான் எனக்கு வலி வரும்
அம்மா என்று உன்னை அழைக்கின்றேன்.
என் விழி தேடிய இடமெல்லாம்
நீ தான் இருந்தாய்,
விழி மூடி உன்னை தேடுகின்றேன்
நீ எங்கே இருக்கின்றாய்,
நினைத்து நினைத்து பார்கிறேன்
என் நிழல்கூட உன்னைத்தானே
தேடுகின்றது
விலையும் பயிர் நீ, உலகில் பத்திரமாய் வாழ்
என்று விண்ணுலகம் சென்றுவிட்டாயா !
எனக்கு தெரியும் ?
நீ விண்ணுலகம் சென்றாலும்
உன் எண்ணமெல்லாம் என் மேல் தான்
என் உயிரே என்று என்னை கொஞ்சியது நீ தானே,
உன் உடல் உலகை விட்டு பிரிந்தாலும் உன் உயிர்
எண்ணுள் கலந்துவிட்டது என் உயிர் பிரியும் வரை
உன் நினைவு நீங்காது அம்மா!