கவிஞர் நாகூர் காதர் ஒலி அவர்களுடன் சந்திப்பு என்னைப்பற்றி அவர்கள் எழுதிய கவிதை.
மலை நாடாம் மலேசியாவின்
கலையார்வ மிக்க உள்ளம்,
நிறைவான அன்பும் பாசமும்
நெஞ்சில் பொங்கும் வெள்ளம்
தொழிலதிபர்,தகவல் தொடர்ப்பாளர், GTM யூடியூப் நிறுவனர்,
எழிலாக உரையாடும்
இனிமையாளர்,
கூத்தாநல்லூரைச் சேர்ந்தவர்,
கோலாலம்பூரில் வாழ்பவர்,
எழுதும் எனக்கு எழுதுகோலை பரிசளித்து இதயத்தைத் தொட்டவர்,
இல்லம் வந்து இனிதுடன் சந்தித்து உள்ளம் நிறைந்த முஹம்மது நியாஸ் அவர்களுடன் இனிய நேரம்..